Skip to main content

விமான கோளாறு சதிச்செயலா??- காங்கிரஸ் புகார்

Published on 27/04/2018 | Edited on 27/04/2018

கர்நாடக தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானகோளாறில் சதியுள்ளதாக காங்கிரஸ் புகாரளித்துள்ளது.

கர்நாடகவில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனி விமானம் மூலம் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல திட்டமிட்டு நேற்று காலை 9.30க்கு  பத்து இருக்கைகளை கொண்ட டாஸால்ட் பால்கன் 2000 விமானத்தில் பயணித்துள்ளார், அவருடன் கவுசல் வித்யாதி உட்பட நான்கு பேர் பயணம் செய்தனர்.

 

rahul



 

அப்போது சுமார் 10.45 மணியளவில் நடுவானில் சென்றுகொண்டிருந்த விமானம் ஒருபக்கம் இழுத்ததுபோல சாய்ந்துள்ளது. மேலும் உலோகங்கள் உராய்ந்ததை போல யூகிக்க முடியாத சத்தம் வெளிப்பட்டது. சீரான சீதோஷண நிலையில் இருந்தும் விமானம் பறக்கக்கூடிய உயரத்திலிருந்து நிலை தடுமாறி குலுங்கியுள்ளது இதனால் உயிர் பயம் ஏற்பட்டு சுமார் 45 நிமிடங்கள் தவித்ததாக ராகுல் காந்தியுடன் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இருமுறை விமானத்தை தரையிறக்க முயன்றும் தோற்று இறுதியில் தரையிறங்கும் பொழுது அதிவேக அதிர்வுகளுடன் விளக்கமுடியாத சத்தத்துடன் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

rahul

 

இதை தொடர்ந்து கர்நாடக போலீசாரிடம்  கொடுக்கப்பட்ட புகாரில் இந்த விமானக்கோளாறு சதிச்செயலா என்று  விசாரிக்க வேண்டும் காங்கிரஸ் தரப்பு கோரியுள்ளது. இதை அறிந்த பிரதமர் மோடி ராகுல் காந்தியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த கோளாறுக்கு விமானத்தின் ஆட்டோ பைலட் மோடில் ஏற்பட்ட பிரச்சனைதான் காரணம் எனவும், விமான ஓட்டிகள் விமானத்தை ஆட்டோ பைலட் மோடில் இருந்து தங்களின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்தான் பாதுகாப்பாக தரையிறக்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சார்ந்த செய்திகள்