Advertisment

ஏர் இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடைமுறையில் இருந்த வழக்கம் மீண்டும் வருகிறது...

கடந்த 2016 ஆம் ஆண்டு ஏர் இந்தியாவின் தலைவராக அஸ்வானி லோஹனி,ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில்,“விமானத்தின் கேப்டன் பயணிகளுடன் உரையாற்றும் போதும் மற்றும் அறிவிப்பு அளிக்கும் போதும் ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழுக்கத்தை சேர்த்து கூறவேண்டும். அத்துடன் விமான பயணிகளிடம் மிகவும் பணிவுடன் கண்ணியத்துடனும் நடந்து கொள்ளவேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

Air India

அதேபோல் தற்போது மீண்டும் ஏர் இந்திய விமானத்தில் விமானி குழு தங்களது ஒவ்வொரு அறிவிப்பின் இறுதியிலும் ‘ஜெய் ஹிந்த்’ முழக்கத்தையும் சேர்த்து கூறவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின்செயல் இயக்குநர் அமிதாப் சிங், இது தொடர்பான அறிவிப்பைவெளியிட்டுள்ளார்.அதில், “விமானி குழு தங்களது ஒவ்வொரு அறிவிப்பின் இறுதியிலும் ‘ஜெய் ஹிந்து’ என்னும் முழக்கத்தை கூறவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதே மாதிரியான அறிவிப்பு கடந்த 2016 ஆம் ஆண்டிலும் ஏர் இந்தியா விமானி குழுவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

Advertisment

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, கடும் நிதிச் சுமையில் சிக்கி தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Air india
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe