அவசரமாக பயணிகள் கீழே இறக்கம்-மீண்டும் பரபரப்பில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்

nn

மும்பைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமான தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஒன்று, இடது பக்க இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விமானம் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை செல்ல வேண்டி இருந்தது. இரண்டு மணிக்கு கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு செல்வதாக இருந்தது.

இந்நிலையில் விமானத்தின் இடது இன்ஜினில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானமானது நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். பழுதானே என்ஜினை விமான நிலைய ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் இறக்கப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்பு கேட்பதாகவும் பழுது சீர் செய்யப்பட்ட பிறகு மீண்டும் விமானம் கொல்கத்தாவில் இருந்து புறப்படும் என தெரிவித்துள்ளனர்.

Air india airport Flight crush Mumbai
இதையும் படியுங்கள்
Subscribe