air india express accident in calicut

துபாயிலிருந்து 191 பேருடன் கேரளா வந்த விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

Advertisment

'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 8.15 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்கு உள்ளானது. இந்தக் கோரவிபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதன் விமானி உயிரிழந்துள்ளதாகவும், துணை விமானி படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான விமானத்தில் 177 பயணிகள் மற்றும் ஊழியர்கள் பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு மீட்புப்படைமற்றும் ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment