
தொடர் வருவாய் இழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள தன் அசையா சொத்துக்களை ஏலம்விட முடிவு செய்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா.
டெல்லி, கொல்கத்தா, மும்பை,பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஏர் இந்தியாவிற்கு சொந்தமான 14 அசையாசொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏர் இந்தியா நிறுவனத்தின் அலுவலகங்கள், ஊழியர்கள் தங்கியிருந்த குடியிருப்புகளை வாங்க விரும்புவோர் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் www.airindia.in என்ற இணையதளத்தில் நடக்கும் ஏலத்தில் பங்கேற்கலாம் என ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us