சென்னையில் இருந்து யாழ்ப்பாணம், திருச்சி, கோவை, மதுரை, பெங்களூரூ உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வரும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான அலையன்ஸ் ஏர் விமானங்கள் அனைத்தும் நவம்பர் 30- ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நிர்வாக சீர்திருத்தம் காரணமாக அலையன்ஸ் ஏர் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு. முன்னறிவிப்பின்றி அலையன்ஸ் ஏர் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

Advertisment

AIR INDIA ALLIANCE FLIGHTS CANCEL ANNOUNCED CHENNAI AIRPORT

இதனிடையே சென்னை- ஷீரடி இடையே நவம்பர் 22- ஆம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஷீரடியில் நிலவும் மோசமான வானிலை, மழை காரணமாக விமானங்கள் ரத்து என அறிவிப்பு.