Advertisment

விமான கதவை மூடும்போது தவறி விழுந்த பணிப்பெண்...

air craft

Advertisment

இன்று காலை மும்பையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பணிபுரியும் விமானப்பணி பெண், அந்த விமானத்தின் கதவை மூடும்போது தவறி வெளியே விழுந்தார். விமனம் பறப்பதற்கு தயார்நிலையில் இருந்தபோது, விமானத்தின் கதவை மூடவரும்போதும் வெளியே விழுந்துள்ளார் 53வயது விமானப் பணிப்பெண்.

இந்த விபத்தால் பணிப்பெண்ணின் காலில் காயம் ஏற்பட, அவரை மும்பயிலுள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சப்பெற்று வரும் அந்த பெண் லேசான கயங்களுடன், உடல்நிலை தேறி வருகிறார். நலமாக இருக்கிறார் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா 864 விமானம் இந்த விபத்தால் 90நிமிடங்கள் தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டது. இதுகுறித்து ஏர்இந்தியா நிறுவனம், பணிப்பெண்ணான ஹர்ஷா லோபோ, காலை ஏஐ-864 விமானத்தின் 777 ஏர்கிராஃப்ட் எல்5 கதவை மூடும்போது தவறி வெளியே விழுந்தார். அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

Air india
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe