இந்திய விமானப்படை தினத்தையொட்டி டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர். ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், இந்திய விமான படை தலைமை தளபதி ஆர்.கே. சிங் பதவுரியா மற்றும் இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் ஆகிய முப்படைகளின் தளபதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
கடந்த 1932- ஆம் ஆண்டு அக்டோபர் 8- ஆம் தேதி, இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.