/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/air asia43434.jpg)
டாடாவுக்கு சொந்தமான ஏர் இந்தியா அதன் துணை நிறுவனமான ஏர் ஏசியா(இந்தியா)வை இணைக்க முடிவு செய்துள்ளது.
கடந்த 1953- ஆம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை 69 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஜனவரி மாதம் டாடா நிறுவனம் முறையாகத் திரும்பப் பெற்றது. இதனிடையே, ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் 83.67% பங்குகளை டாடா நிறுவனம் வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகளை மலேசியாவின் ஏர் ஏசியா குழுமத்தைச் சேர்ந்த ஏர் ஏசியா இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் வைத்துள்ளது.
இந்த நிலையில், டாடா நிறுவனம் நான்கு விமான நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் உள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா மற்றும் ஏர் இந்தியா ஏர்போர்ட்ஸ் சர்விஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் ஒரே அலுவலகத்தில் சேவையை வழங்க உள்ளன.
Follow Us