Advertisment

அகமதாபாத் விமான விபத்து; கருப்புப் பெட்டியின் தரவுகள் சேகரிப்பு!

ahmedabad-flight-black-box

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. விபத்திற்குள்ளான விமானத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சிபிஆர் மற்றும் எஸ்பிஆர் கருவிகளான பிளாக் பாக்ஸ் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. 

Advertisment

அதாவது விமான போக்குவரத்துறை அமைச்சகத்தின் சார்பில்  விசாரணையானது விமான விபத்து  விசாரணையின் பணியக இயக்குநர் ஜெனரல் தலைமையிலான குழுவானது விசாரித்து வருகிறது. இந்த குழுவில் விமான மருத்துவ நிபுணர்கள், ஏடிசிஅதிகாரி மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். விமானம் விபத்திற்குள்ளான கட்டடத்தின் மேற்பகுதியில் இருந்து கடந்த 13ஆம் தேதி சிபிஆர் என்ற பிளாக் பாக்ஸ் கண்டறியப்பட்டது.  அதனைத் தொடர்ந்து ஜூன் 16ஆம் தேதி 2வது பிளாக் பாக்ஸின் பகுதி இடிபாடுகளில் இருந்து கைப்பற்றப்பட்டது.

Advertisment

அதன் பின்னர் இந்த கருவிகள் டெல்லியில் ஆய்வகத்திற்குக் கொண்டுவரப்பட்டு அதிலிருந்து தரவுகளைப் பிரித்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கருப்பு பெட்டியின் முழு தரவுகளும் பதிவிறக்கம் செய்யப்பட்டு எதன் அடிப்படையில் இந்தவிபத்தானது ஏற்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட உள்ளது. 

flight Gujarat Air india ahmedabad
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe