/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_256.jpg)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல், கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவர், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குமிகவும் நம்பிக்கைக்குரியவர். அதுமட்டுமின்றி பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில், சோனியா காந்திக்கு உறுதுணையாக இருந்தவர். அகமது படேல், சோனியா காந்தியின் வலது கை எனும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். அதுமட்டுமின்றி இவர் ராஜீவ்காந்திக்கும் பெரும் பக்கபலமாக இருந்தவர்.
இவர் 1985-ல் ராஜீவ் காந்திக்கு நாடாளுமன்றச் செயலாளராகப் பணியாற்றியிருந்தார். அப்போதிலிருந்து ராஜீவ்காந்திக்கு நம்பிக்கையானவராக மாறினார். இவர்களுடனான நட்பு அப்படியே சோனியா காந்தியிடமும் தொடர்ந்தது.
இந்திரா காந்தி காலத்தில், 1980 மற்றும் 1984 தேர்தல்களில் குஜராத்தின் பரூச் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர், கடைசியாக 2017ல் குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வானார். அகமது படேல், இதுவரை எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார். மூன்று முறை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும், ஐந்து முறை மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_7.jpg)
சோனியா காந்திக்கு ஏற்பட்ட பல்வேறு இக்கட்டான தருணங்களிலும் அவருக்கு உறுதுணையாகவும் அரசியல் ஆலோசகராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு, 10 வருடங்கள் ஆட்சி நடத்தியபோது கட்சிக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையேயான முக்கிய இணைப்பாகவும், அமைப்பில் முக்கிய முடிவெடுப்பவர்களில் ஒருவராகவும் இருந்தார். ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் இவரை முழுமையாக நம்புவார்கள், காரணம் அந்த அளவிற்கு இவரின் விஸ்வாசமும் அவர் மீதான நம்பிக்கையும்தான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_0.jpg)
காங்கிரஸ் கட்சி மீண்டு எழுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் ஆலோசனைகளும் நடைபெற்றுவருகிறது. அதேபோல், அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மற்றும்நாடாளுமன்றத் தேர்தலுக்குதயாராகிவரும் காங்கிரஸுக்கும் சோனியா காந்திக்கும் பெரும் தூணாக இருந்த அகமது படேலின் மறைவு, பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us