6100 கோடி விவசாய கடன் தள்ளுபடி, நெல்லுக்கு கூடுதல் விலை; பூபேஷ் பாகெல் அறிவிப்பு

con

நேற்று மத்திய பிரதேசத்தின் முதல்வராக கமல்நாத் பதவியேற்றவுடன் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தீஸ்கர் முதல்வராக நேற்று பதவியேற்ற பூபேஷ் பாகெல், 6100 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்யவும், நெல்லுக்கு கூடுதல் விலை அளிக்கவும் வகை செய்யும் ஆணை பிறப்பித்துள்ளார். இதன்படி நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 2500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் பூபேந்திர பாகேல் நிருபர்களிடம், 'காங்கிரஸ் கட்சி தேர்தலில் கூறியதுபோல் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். முதல்கட்டமாக 16.65 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள், சத்தீஸ்கர் கிராம வங்கியில் நவம்பர் 30-ம் தேதி வரை வாங்கியுள்ள ரூ.6100 கோடி மதிப்புள்ள அனைத்து பயிர்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். மற்ற வங்கிகளிலும் பயிர்க் கடன் விவசாயிகள் பெற்றிருந்தால், அதுகுறித்து வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தும். மேலும் நெல்லுக்கு தற்போது ஆதார விலையாக மத்திய அரசு நிர்ணயித்த ரூ.1,750 வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார விலையை ரூ.2,500 ஆக உயர்த்தி இருக்கிறோம். மீதமுள்ள ரூ.750 மாநில அரசு விவசாயிகளுக்கு வழங்கும். தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300 போனஸாக வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 450 ரூபாயை மாநில அரசு நெல்லுக்கு வழங்கும். எனவே, இனி மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்று அரசு கொள்முதல் செய்யும்' என கூறினார்.

chattishghar congress elections
இதையும் படியுங்கள்
Subscribe