Advertisment

புதுச்சேரியில் விவசாய கடன்கள் ரத்து!

Agricultural loans canceled in Pondicherry

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சரும், நிதியமைச்சருமான என்.ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.திருக்குறளை வாசித்து பட்ஜெட் உரையை தொடங்கிய அவர், "அனைத்து வகை உதவித்தொகை பெறுபவர்களுக்கும் ரூபாய் 500 உயர்த்தி வழங்கப்பட்டது. மாநிலத்தின் சொந்த வருவாய் ரூபாய் 6,190 கோடியாக உள்ளது.

Advertisment

விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூபாய் 5,000 வழங்கப்படும்; புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வாங்கப்படும். மீனவர்களுக்கு டீசல் மானியம், மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தப்படும். செப்டம்பர் 23, 24 ஆம் தேதிகளில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். பட்டியலின பெண்களின் திருமண உதவித்தொகை ரூபாய் 75,000- லிருந்து ரூபாய் 1 லட்சமாக உயர்த்தப்படும். புதுச்சேரி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்தார்.

Advertisment

budget Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe