Advertisment

கரோனா பாதித்த கணவர்... விட்டுச் சென்ற மனைவி... தேடிப்பிடித்த அதிகாரிகள்...

தனது கணவருக்கு கரோனா பாதித்த நிலையில், அவரை விட்டுவிட்டு 25 வயது பெண் ஒருவர் பெங்களூருவிலிருந்து டெல்லியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு விமானம் மற்றும் ரயில் மூலம் பயணித்துள்ளது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

agra woman suspected with corona virus travelled through flight

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

பெங்களூருவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். கடந்த மாதம் அவருக்கும், ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிகழ்ந்துள்ள நிலையில், இருவரும் சேர்ந்துகடந்த மாதத்தில் இத்தாலிக்கு தேனிலவு சென்றுள்ளனர். அதன்பின் இந்தியா வந்த அப்பெண்ணின் கணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கும் கரோனா பரவல் இருக்கலாம் என்ற சந்தேகத்தால் அவரை தனிமைப்படுத்திக் கண்காணிப்பில் வைக்க முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் , அப்பெண் யாருக்கும் சொல்லாமல் அங்கிருந்து விமானம் ஏறி டெல்லிக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் ஆக்ராவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அந்த பெண் பெங்களூருவிலிருந்து தப்பித்து ஆக்ரா சென்ற தகவல் ஆக்ரா அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றபோது, அப்பெண் அங்கு இல்லை எனக் கூறி அவரது தந்தை அதிகாரிகளை உள்ளே விட மறுத்துள்ளார்.

பின்னர் மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் காவலர்களோடு அங்குச் சென்ற அதிகாரிகள், அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரையும் அழைத்துச்சென்று தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர். கரோனா பாதிப்பிற்கு உள்ளாவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ள அந்த பெண், கரோனா பாதிக்கப்பட்ட தனது கணவனை விட்டுவிட்டு பொது போக்குவரத்து வாயிலாகத் தகுந்த பாதுகாப்பு இன்றி டெல்லி வரை சென்றது பொதுமக்களிடையேயும், அப்பகுதி பயணிகளிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

google corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe