agni missile test

Advertisment

அக்னி ஏவுகணை வரிசையில், அக்னி-ப்ரைம் என்ற புதிய ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இன்று காலை 10.55 மணி அளவில், ஒடிசாஒடிசா கடற்கரையில் பகுதியில் இந்த சோதனை வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது.

அக்னி-ப்ரைம் ஏவுகணை சோதனை பற்றி டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் கூறுகையில், கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பல்வேறு டெலிமெட்ரி மற்றும் ரேடார் நிலையங்கள் ஏவுகணையைக் கண்காணித்தன. திட்டமிட்ட போக்கில் பயணித்த ஏவுகணை, இந்த திட்டத்திற்கான அனைத்து நோக்கங்களையும் உயரிய துல்லியத்துடன் பூர்த்தி செய்தது" என கூறியுள்ளனர்.

மேலும் அவர்கள், அக்னி-ப்ரைம் ஏவுகணை 1,000 கிலோமீட்டருக்கும், 2,000 கிலோமீட்டருக்கும் இடையிலான இலக்கைத் தாக்கும் திறன்கொண்டதுஎனவும்கூறியுள்ளனர். இந்த அக்னி-ப்ரைம் ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்துசென்று தாக்குதல் நடத்தும் திறன் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.