/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/telungana honour killing.jpeg)
தெலுங்கானாவில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரனாய் என்பவரை ஆணவக்கொலை செய்தனர். இந்த சம்பவம் ஓய்வதற்குள்ளே நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள ஒரு பகுதியில், நடு ரோட்டில் ஆணவக்கொலை முயற்சி ஒன்று நிகழ்ந்துள்ளது. அதுவும் சொந்த மகளின் தந்தையே, தனது மகளையும், மருமகனையும் கொலை செய்ய முய்ற்சி செய்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதரபாத்தைச் சேர்ந்த நரசிம்மச்சாரி, இவரின் மகள் மாதவி. அதே பகுதியில் வசித்து வரும் சந்தீப் என்பவரும் மாதவியும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். மாதவியின் குடும்பம் உயர் சாதியினர் என்பதால் வேற்று சாதியை சேர்ந்த சந்தீப்பின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை மாதவியின் தந்தை. இந்நிலையில், கடந்த வாரம் சந்தீப்பும் மாதவியும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இதானால் மாதவியின் தந்தைஆத்திரத்தில் இருந்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madavi.jpg)
இந்நிலையில், நேற்று இந்த ஜோடியை தொடர்புகொண்ட மாதவியின் தந்தை, உங்கள் இருவருக்கும் புத்தாடை எடுத்து தரவேண்டும் என்று ஹைதராபாத்தில் இருக்கும் சாந்தாநகர் பகுதிக்கு அழைத்துள்ளார். தந்தையின் மீது இருக்கும் பாசத்தில் மாதவி, அவரின் மேல் சந்தேகம் எதுவும் எழாமல் தந்தை சொன்ன இடத்திற்கு தனது கணவரை அழைத்து வந்துள்ளார். அந்த இடத்திற்கு சென்றவுடன் மாதவி, தந்தை ஓடிசென்று பார்க்க, உடனடியாக அவரது தந்தை அரிவாளை எடுத்து சந்தீப்பை வெட்ட ஆரம்பித்துள்ளார். அதை தடுக்க வந்த மாதவியையும் கண் மூடிதனமாக வெட்டியுள்ளார். இது அனைத்தும் ரோட்டுக்கு அருகே நடந்தது. இச்சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அங்கிருந்த அக்கம்பக்கத்தினரால், இந்த ஜோடியை வெட்டிவிட்டு மாதவியின் தந்தை தப்பித்துவிட்டார். அருகே இருந்தவர்கள், ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது, “ மாதவி சீரியஸாக இருக்கின்றார். சந்தீப் காயங்கள் பலமாக இருப்பதால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தலைமறைவாக இருக்கும் மாதவியின் தந்தையை தேடிக்கொண்டிருக்கிறோம்” என்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)