/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/8_153.jpg)
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொடூரமான கொலைத் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டமும் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், கொல்கத்தாவை போன்று உத்தரபிரதேசத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 9 ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிர்மலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 22 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் நிர்மலாவை வலுக்கட்டாயமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குக் கடத்திச் சென்று, அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அதற்குப் பயந்து நிர்மலாவும் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில்மன வேதனைக்கு ஆளான நிர்மலா, நடந்த சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகள் 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)