arun jaitley

Advertisment

மத்திய நிதி மந்திரியும், மாநிலங்களவை பாஜக தலைவருமான அருண் ஜெட்லி இரண்டு மாத ஓய்வுக்கு பின்னர் இன்று மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் கலந்துகொண்டார்.

அருண் ஜெட்லி, கடந்த மே 14ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சராக பியூஸ் கோயல் ஆக்டிங் பொறுப்பு ஏற்றுக்கொண்டு செயல்பட்டார்.

இந்நிலையில், அருண் ஜெட்லி இரண்டு மாத ஒய்வு பிறகு இன்று நடந்த மாநிலங்களவை துணைத்தலைவருக்கான தேர்தலில் கலந்துகொண்டு வாக்களித்தார். வெற்றி பெற்ற பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஸ் நாராயண் சிங்க்கு அருண் ஜெட்லி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.