ADVERTISEMENT

இந்தியாவுக்கு வந்த ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ்... சோதனைகளைத் தீவிரப்படுத்திய அரசு...

11:56 AM May 04, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தீவிர வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் அசாம் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

பன்றிகளைத் தாக்கும் ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் இதுவரை இந்தியாவுக்கு வந்திராத நிலையில், தற்போது முதன்முதலாக இதன் பாதிப்பு அசாம் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இந்த வைரசால் இதுவரை 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், இந்திய எல்லைப் பகுதியான அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியா வந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசாம் மாநில கால்நடை நலத்துறை அமைச்சர் அதுல் போரா, "இந்தியாவிலேயே ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் முதல் முறையாக அசாமில் கண்டறியப்பட்டுள்ளது. 306 கிராமங்களில் இதுவரை 2,500க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளன. இது அதிவேகமாகப் பரவும் வைரஸ் என்பதால், இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நோய் தாக்கினால் பன்றிகள் இறப்பது 100 சதவீதம் உறுதியாகும். ஆதலால், மற்ற பன்றிகளை நோய்த் தாக்காமல் காப்பது மிகமுக்கியம். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கிலோ சுற்றளவுக்கு இருக்கும் அனைத்துப் பன்றிகளின் மாதிரிகளும் எடுக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், அண்டை மாநிலங்களிலிருந்து எந்தவிதமான பன்றிகளும், கால்நடைகளும் கொண்டுவர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். பன்றிகளின் இறைச்சி, எச்சில், ரத்தம், திசுக்கள் ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் பரவும். இந்த வைரஸால் மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதால் அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும் விவசாயிகளும் பண்ணை வளர்ப்போரும் பீதியடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT