Advani returned home from the hospital

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (வயது 96) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் சிறுநீரக பாதிப்புகளால் அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் கடந்த ஜூன் 26 ஆம் தேதி இரவு அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

Advertisment

இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் எல்.கே. அத்வானியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அத்வானி டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு (03.07.2024) இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

Advertisment

இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கையில், “பாஜக மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி இரவு 9 மணியளவில் டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவர் உடல் நிலை சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அத்வானியின் உடல்நிலை குறித்து பாஜக தலைவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தொலைப்பேசி வாயிலாகக் கேட்டறிந்தனர். இந்நிலையில் அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இன்று (04.07.2024) மாலைடிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.