Advertisment

நீதிபதிகள் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்த அத்வானி...

advani appears before cbi court in babar masjid case

Advertisment

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், காணொளிக்காட்சி மூலம் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார் அத்வானி.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரித்து வரும் சூழலில், இதுதொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், லக்னோவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் காணொளிக்காட்சி மூலம் ஆஜரான பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி இன்று தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி நேற்று தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த நிலையில், அத்வானியிடம் நீதிபதி எஸ்.கே.யாதவ் இன்று வாக்குமூலம் பெற்றார். மேலும், ஆகஸ்ட் 31க்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி இனி தினசரி விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

babri masjid case Advani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe