அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் லக்னோ விமான நிலையங்களின் பராமரிப்பு, மேம்பாடு ஆகிய அனைத்தும் உட்பட அதானியின் நிறுவனம் கவனித்து கொள்ளும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆறு விமான நிலையங்களுக்கு நடந்த ஏலத்தில் அதானியின் நிறுவனம் 5 விமான நிலையங்களை அதிக தொகைக்கு ஏலம் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐந்து விமான நிலையங்களின் வரவு, செலவு முதல் அனைத்தும் அதானி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்.
மேலும் இந்த விமான நிலையங்களில் இருந்து பயணம் செய்யும் ஒவ்வொரு பயணிக்குமான தொகையாக சராசரியாக மாதத்திற்கு ரூ.150 முதல் ரூ.180 வரை அரசுக்கு வழங்கப்படும். மீதமுள்ள தொகையை வைத்து அதானி நிறுவனம் அந்ததந்த விமான நிலையங்களை பராமரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.