உலக அளவில் தற்போது கோடிகளில் புரளும் தொழிலாக உள்ளது டேட்டா கிளவுட் ஸ்டோரேஜ் தொழில்.

adani group plans to construct data park in southern india

Advertisment

Advertisment

இணையத்தில் நாம் பார்க்கும் தகவல்கள், அரசிடம் உள்ள நம்மை பற்றிய அந்தரங்க தகவல்கள் ஆகியவை மிகப்பெரிய தரவு பூங்காக்களில் உள்ள சர்வர்களில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும். தற்போது உலக அளவில் கூகுள், அமேசான் ஆகிய நிறுவனங்கள் சர்வதேச அளவில் இந்த தொழிலில் கொடிகட்டி பறந்து வருகின்றன.

இந்தியாவை பொறுத்த வரை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இதில் முன்னோடியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுடைய தகவல்களை வெளிநாட்டு சர்வர்களில் சேமிக்காமல் அதற்கான சேமிப்பு மையங்களை இந்தியாவிலேயே அமைக்கவேண்டும் என மத்திய அரசு அறிவிக்க உள்ளது.

இதனை தொடர்ந்து இந்த துறையிலும் கால் பதிப்பதற்கான வேலைகளில் அதானியின் நிறுவனம் இறங்கியுள்ளது. சுமார் 70,000 கோடி ரூபாய் முதலீட்டில் தென்னிந்தியாவில் "டேட்டா பார்க்" அமைக்க அதானி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசின் இந்த புதிய முடிவினால் அதானி "டேட்டா பார்க்" ஆரம்பிக்கும் பட்சத்தில், கூகுள், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்திய வணிகம் மற்றும் மற்ற தகவல்கள் குறித்த தரவுகள் அம்பானி மற்றும் அதானி நிறுவனங்கள் வழியாகவே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.