Adani to donate Rs 60,000 crore

Advertisment

இந்தியாவின் பெரும் செல்வந்தரான கவுதம் அதானி தனது 60-வது பிறந்தநாளையொட்டி, பல்வேறு சமூக நலப்பணிகளுக்காக 60,000 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அதானி குழுமம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கவுதம் அதானியின் 60- வது பிறந்தநாளையொட்டியும், அவரது தந்தை சாந்திலால் அதானியின் நூற்றாண்டையொட்டியும், இந்த நன்கொடையை அளிக்க முடிவு செய்துள்ளார். கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகிய பணிகளுக்காக 60,000 கோடி ரூபாயை அதானி அறக்கட்டளை செலவிடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அதானி குழுமத்தின் சொத்துகள் பன்மடங்கு உயர்ந்து, உலக பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.