Advertisment

அதானி விவகாரம்; பிரதமர் மோடியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி!

Adani Affair; Rahul Gandhi slammed Prime Minister Modi!

அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற கடந்த 2020 - 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அதாவது இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான கவுதம் அதானி மீது புகார் எழுந்தது. இதில் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் அதானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற தொழிலதிபர் அதானி லஞ்சம் தர சம்மதித்துள்ளார் என்ற பரபரப்பு கருத்தை நீதிபதி தெரிவித்துள்ளார். சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற லஞ்சம் கொடுக்க முன்வந்த புகாரில் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த லஞ்சப் புகார் எதிரொலியால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

Advertisment

அந்த வகையில் அதானி எண்டர் பிரைசஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் பங்குகள் விலை 10 சதவீதம் சரிந்துள்ளன. அதானி துறைமுக (போர்ட்) பங்கு விலையும் 10 சதவீதத்துக்கு மேல் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. அதே போன்று அதானி என்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி, அதானி பவர் நிறுவனங்களின் பங்குகள் விலை தலா 10 சதவீதத்துக்கும் மேல் விலைகள் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அதானி எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளில் விலை 20 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளன.

இந்நிலையில் சூரிய சக்தி ஒப்பந்த லஞ்ச வழக்கில் கௌதம் அதானி மற்றும் பலர் மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுவது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “இது தொடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பது முக்கியம். இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட. வேண்டும். ஆனால் இப்போது அதானி ஏன் சிறையில் இல்லை என்பது தான் முக்கிய கேள்வி. அவர் இந்தியாவில் குற்றம் செய்துள்ளார், லஞ்சம் கொடுத்தார், அதிக விலைக்கு மின்சாரம் விற்றுள்ளார் என்று அமெரிக்க ஏஜென்சி கூறியுள்ளது.

Adani Affair; Rahul Gandhi slammed Prime Minister Modi!

இந்த குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை. அவரால் எதுவும் செய்ய முடியாது. ஏதாவது செய்ய நினைத்தாலும் அதானியின் கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி இருப்பதால் முடியாது. ரூ. 2 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், அதானியுடன் பிரதமருக்கு தொடர்பு இருப்பதால் அவர் கைது செய்யப்பட மாட்டார் அல்லது விசாரணையை எதிர்கொள்ள மாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

Adani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe