Advertisment

மீண்டும் காங்கிரஸில் நடிகை விஜயசாந்தி

nn

தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டு இருக்கும் நிலையில், தனக்குத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் அதிருப்தி அடைந்த நடிகை விஜயசாந்தி, பாஜகவிலிருந்து விலகிய நிலையில்மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

Advertisment

வரும் 30 ஆம் தேதி ஒரே கட்டமாகத்தெலுங்கானாவில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தெலுங்கானாவில் தீவிர பரப்புரை சூடுபிடித்திருக்கிறது. இந்தநிலையில் 2014 ஆம் ஆண்டு முதல்2019 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை விஜயசாந்தி பின்னர் பாஜகவில் இணைந்தார். பாஜகவின் தேசிய செயற்குழு வரை முக்கிய பதவி வகித்த அவர், தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடத்தனக்கு பாஜக வாய்ப்பளிக்கும் என இருந்தார்.வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால் அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் காங்கிரஸ் தேசியத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் நடிகை விஜயசாந்தி இணைந்துள்ளார்.

Advertisment

congress telangana vijayasanthi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe