Advertisment

பாஜக பிரமுகர் மகன் மீது மாடல் அழகி பாலியல் புகார்!

தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் 27 வயதான மாடல் அழகி சஞ்சனா. இவர் ஐதராபாத் மந்தாப்பூரில் உள்ள ஒரு இரவு கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு தெலங்கானா முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் பாஜக பிரமுகருமான நந்தேஷ்வர் கவுடு மகன் ஆஷிஷ் கவுடு சஞ்சனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

Advertisment

actress sanjana

இது குறித்து சஞ்சனா மந்தாப்பூர் காவல் நிலையத்தில் "ஓட்டலில் வைத்து ஆஷிஷ் கவுடு தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்" என்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் 354 மற்றும் 509 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆஷிஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது மந்தாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தலைமறைவாகி விட்ட ஆஷிஷ் கவுடு, "சஞ்சனா புகார் அளித்ததிற்கு பின்னால் எதிர்கட்சியினரின் அரசியல் உள்ளது. இந்த பொய் வழக்கிற்கு நான் பயப்பட மாட்டேன். விரைவில் காவல்நிலையத்தில் ஆஜராகி உண்மையை தெரிவிப்பேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தெலங்கான அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

hotel police sanjana singh
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe