
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடனே இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தலைமையின் உத்தரவுப்படி 25 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். அதனையடுத்து அமைய இருக்கும் அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என பேசப்பட்டது. இந்நிலையில் இன்று ரோஜா அமைச்சராக பதவியேற்றுள்ளார். இவருடன் சேர்ந்து மொத்தம்25பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இதில் 10 பேர் ஏற்கனவே அமைச்சர் பதவி வகித்தவர்கள். மற்ற 15 பேர் புதியவர்கள்.
தற்பொழுது நடிகை ரோஜா உட்பட 25 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள நிலையில், இவர்களுக்கான இலாகா இன்று மாலை அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நகரி தொகுதியில் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த ரோஜாவிற்கு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்த தொடக்கத்திலேயே அமைச்சர் பதவி கிடைக்கும் என்றெல்லாம் தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அதிலும் வெளியான தகவலின் அடிப்படையில் அவருக்கு உணவுத்துறை ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)