Advertisment

நடிகை ரம்யாவிற்கு என்ன ஆச்சு? - தோழி பகிர்ந்த உண்மை

Actress Ramya is doing well

பிரபல நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்.பியுமான நடிகை ரம்யா மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகத்தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள்பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், நடிகை ரம்யா நலமுடன் இருப்பதாகத்தகவல் வெளியாகியுள்ளது. ரம்யாவிற்கு நெருக்கமானவர்களுக்குத்தொடர்பு கொண்டு கேட்டபோது, தற்போது நலமுடன் இருப்பதாகவும்இது தவறான செய்தி என்றும் மறுத்துள்ளனர். மேலும் ரம்யாவின் தோழியும் பத்திரிகையாளருமான சித்ரா சுப்ரமணியம் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், தற்போது ரம்யாவுடன் பேசியதாகவும், அவர் நாளை ஜெனிவாவில் இருந்து பிராக் நாட்டிற்குச்செல்வதாகவும் அதன் பிறகு அவர் பெங்களூருதிரும்புவார் என்றும் பதிவிட்டுள்ளார்.

Advertisment

நடிகை ரம்யா, தமிழில் பொல்லாதவன், கிரி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரம்யா, எம்.பியாகவும் இருந்துள்ளார்.

congress ramya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe