தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 90 களில் கொடிகட்டி பறந்த நடிகை ஜெயப்பிரதா. சலங்கை ஒலி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வந்தார்.
அதன் பின் சமாஜ்வாடி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தல் ஆகிய கட்சிகளில் இருந்தார். சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் தனியாக கட்சி ஆரம்பித்த இவர் அடுத்து வந்த தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தார். அதனை அடுத்து ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியில் இணைந்தார். ராஜ்ய சபா எம்.பி யாக இருந்த இவர் தற்போது பாஜக வில் இணைந்துள்ளார். மேலும் எதிர்வ்ரும் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் சீட் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.