Advertisment

நடிகை பானுப்ரியா மீது குழந்தைகள் நலவாரியம் நடவடிக்கை; போக்ஸோ சட்டத்தில்...

jhjnhjnhnhn

நடிகை பானுப்ரியா தனது வீட்டில் வீட்டுவேலை செய்யும் சிறுமியை அடித்து துன்புறுத்துவதாகவும், சம்பளம் கொடுக்காமல் அலைக்கழிப்பதாகவும் நடிகை பானுப்ரியா மீது அவர் வீட்டில் வேலைசெய்யும் அச்சிறுமியின் தாயார் புகாரளித்தார். மேலும் பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தருகிறார் எனவும் அவரது தாயார் புகாரளித்தார். இதனையடுத்து பானுப்ரியாவின் வீட்டில் இருந்த அந்த சிறுமியை குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை அன்று மீட்டனர். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 14 வயது சிறுமியை வீட்டில் பணியில் அமர்த்தி கொடுமைப்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் பானுப்ரியா மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நலவாரியம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் டிஜிபிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Advertisment

child labour banupriya Actress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe