ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரபலங்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தனர்.

Advertisment

bengal actor

தமிழ் இயக்குனர் மணிரத்தினம், மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் அபர்ணா சென், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குகா, மேற்கு வங்க நடிகர் கவுசிக் சென் உள்ளிட்ட 49 பேர் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர், இதர சிறுபான்மையினர் மீது கும்பல்களாக தாக்குதல் நடத்தி கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறையை தூண்டும் கோஷமாக மாறிவருவதை தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மோடியை வற்புறுத்தி இருந்தனர்.

Advertisment

இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகர் கவுசிக் சென்னுக்கு பாஜகவினர் கொலை மிரட்டலை விடுத்துள்ளனர். இது மேற்கு வங்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.