Skip to main content

நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி; ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த காவல்துறை

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
n

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இது உண்மையா வதந்தியா என்ற சந்தேகங்கள் எழுந்த நிலையில் தற்போது காவல்துறை அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது உண்மை என உறுதிப்படுத்தியுள்ளது. அவர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது.

நடிகர் ஷாருகான் நலமடைந்து மீண்டு வர வேண்டுமென அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்