Skip to main content

நடிகர் பிரகாஷ்ராஜூடன் செல்ஃபி எடுத்த மனைவியை கணவன் திட்டியதால் பரபரப்பு!

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவில் உள்ள மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.இவர் அரசியல் முழு கவனம் செலுத்திய நாளிலிருந்தே பிஜேபிக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.இவர் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு ஓட்டலில் தங்கியிருந்த பிரகாஷ் ராஜை செல்ஃபி எடுக்க ஒரு பெண் அனுமதி கேட்டுள்ளார் பிரகாஷ்ராஜ் அதற்கு அனுமதி கொடுத்துள்ளார். பின்பு அந்த பெண்ணும்,அவரது மகளும் பிரகாஷ் ராஜுடன் செல்ஃபி எடுத்துள்ளனர். உடனே அங்க வந்த அந்த பெண்ணின் கணவர் அவரது மனைவியையும்,குழந்தையும் திட்டி உள்ளார்.


  prakashraj

இதற்கு என்ன காரணம் கேட்டபோது , பிரகாஷ் ராஜ் தொடர்ந்து மோடியை விமர்சனம் செய்து வருவதால், அவருடன் செல்ஃபி எடுப்பது தவறு என்று கூறியுள்ளார். கணவர் பொது வெளியில் மற்றவர்கள் முன் திட்டியதால் அந்த பெண், அவரது மகள் அங்கேயே அழுதிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ்ராஜ் மன உளைச்சலுடன்,  அந்த பெண்ணின் கணவரை தனியே அழைத்து, ''என்னையும், மோடியையும் முன்னிறுத்தியா நீங்கள் திருமணம் செய்தீர்கள். பொது இடத்தில் மனைவியை இப்படி அசிங்கப்படுத்துவது தவறு என்று கூறியுள்ளார். பின்னர், அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டாராம். ஆனால், இந்த சம்பவம் பற்றி பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; போலீசார் தீவிர விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
woman lost their life in trichy

திருச்சி கீழ தேவதானம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 46. ). இவரது மனைவி நித்யா (வயது 34). இவர் கடந்த ஆறு வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு கடந்த 3 வருடங்களாக தோல்நோய் தொடர்பான பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இதற்காக நித்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்திடைந்த நித்யா சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.