பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக நடிகர்
பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு!
பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை சம்பவம் குறித்து ஒரு பெரிய கூட்டமே சமூக வலைதளங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் அவர்கள் யாரென்றும், அவர்கள் கொள்கைகள் என்னவென்றும் நன்றாகவே தெரியும். அவர்களெல்லாம் பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள்தான் என்பது அதிர்ச்சிக்குரிய உண்மை. இதையெல்லாம் பார்த்தும் மோடி மவுனமாக இருப்பதாக இருப்பது எனக்கு வேதனையளிக்கிறது. அவர் மவுனமாக இருப்பதன் மூலம் என்னைவிட சிறந்த நடிகர் என காட்ட முயற்சிக்கிறார் என நடிகர் பிரகாஷ் ராஜ் இரண்டு நாட்கள் முன்னால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை லக்னோ நீதிமன்றத்தில் வரும் அக்டோபர்-7ல் நடைபெற உள்ளது.