பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ’ஸ்ரீலட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சலீம் என்ற படத்தை தயாரித்தார். இதில் மஞ்சு விஷ்ணு, இலியானா டி குரூஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு டிசம்பரில் இப்படம் வெளியானது.

Advertisment

ம்

இப்படத்தை இயக்கிய தேவதாசு புகழ் இயக்குநர் ஒய்.வி.எஸ். சவுத்ரிக்கு சேர வேண்டிய சம்பள தொகை 1.60 கோடிக்கு பதிலாக ரூ.1.10 கோடி பணம் தரப்பட்டு உள்ளது. மீதம் 40.50 லட்சம் தொகைக்கு மோகன் பாபு காசோலை தந்துள்ளார். அந்த காசோலை பணமின்றி திரும்பி வந்து விட்டது.

Advertisment

இதையடுத்து ஒய்.வி.எஸ்.சவுத்ரி வழக்கு தொடர்ந்தார். விசாரணையில் சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் செக் மோசடி வழக்கில் நடிகர் மோகன் பாபுவுக்கு 1 வருட சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ரூ.41.71 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டதால், மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய ஒரு மாத காலஅவகாசம் அளித்து உத்தரவை நீதிபதிகள் தற்காலிக ரத்து செய்துள்ளனர்.

Advertisment