Advertisment

காப்பாற்றிய போலீசார்: குடும்பத்துடன் நன்றி தெரிவித்த நடிகர் ஜெயராம்!

Actor Jayaram

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நடிகர் ஜெயராம் திருச்சூர் மாவட்டத்தில் தனது மனைவி பார்வதி, மகள் மாளவிகாவுடன் காரில் சென்று கொண்டு இருந்தார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

தேசிய நெடுஞ்சாலை 544–ல் குதிரன் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தபோது, திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. உயரத்தில் இருந்து மண்சரிந்து வந்து சாலையில் விழுந்தது. இதில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கித் கொண்டன.

அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஜெயராம் காரையும் மண் சூழ்ந்தது. உடனடியாக வடக்கன்சேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

வடக்கன்சேரி போலீசார் விரைந்து சென்று ஜெயராம் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். ஜெயராம் வடக்கன்சேரி காவல்நிலையத்திற்கு சென்று அங்கிருந்த போலீசார்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் வெறொரு காரில் அனுப்பி வைக்கப்பட்டனர். காவல்நிலையத்தில் ஜெயராம் இருந்த படம் வைரலாகி வருகிறது.

Actor Jayaram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe