actor akshaykumar covid 19 test for positive

தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு செய்யப்பட்ட கரோனா மருத்துவ பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா விதிமுறைகளின் படி, நான் என்னை எனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். தயவு செய்து என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

actor akshaykumar covid 19 test for positive

முன்னதாக நடிகர்கள் அமிர்கான், ரன்பீர் கபூர், ஆலியாபட், மாதவன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.