
பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கும் மழை நீரில் கால் படக்கூடாது என்பதற்காக பள்ளி மாணவர்களை இருக்கைகளை எடுத்து வரிசையாக போடச் சொல்லி அதன் மீது ஆசிரியை ஒருவர் நடந்து வந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில்வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது.
உத்திரபிரதேசம் மாநிலம் மதுராவில் அரசுப்பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்த ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்தில் தேங்கி இருந்த மழைநீரில் கால் படக்கூடாது என்பதற்காக வகுப்பு மாணவர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். அதன்படி மாணவர்களும் வகுப்பறையில் இருந்த நாற்காலிகளை வரிசையாக அடிக்கினர். மேலும் நாற்காலிகள் சரிந்து விடக்கூடாது என்பதற்காக மாணவர்களை நாற்காலிகளை பிடிக்கவும் சொல்லியுள்ளார். அதன் பிறகு ஒவ்வொரு நாற்காலியின் மீதும் நடந்து சென்ற அந்த ஆசிரியை கடைசி வரை மழை நீரில் கால் வைக்காமல் வெளியேறினார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைத்து தரப்பிடம் இருந்தும் கண்டனத்தைப் பெற்றது. இந்நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் தற்பொழுது அந்த ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Follow Us