கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது, உடுப்பி மாவட்டத்தின் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் காவி துண்டை அணிந்துகொண்டு வந்தனர். இதனால், தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து ஹிஜாப் தடையைத்திரும்ப பெற, கடந்த ஆண்டில் ஆட்சிக்கு வந்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார். கர்நாடகா சம்பவத்தைப் போல் மேற்கு வங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும் அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த சஞ்சிதா காதர் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சஞ்சிதா காதர் ஹிஜாப் அணிந்து பணிக்கு வந்துள்ளார். இதனைக் கவனித்த கல்லூரி நிர்வாகம், அவரிடம் ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆசிரியை சஞ்சிதா காதர், தனது பணியை ராஜினாமா செய்து கல்லூரியை விட்டு வெளியேறினார்.
இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையானது.அதனைத்தொடர்ந்து,ஹிஜாப்அணிவதற்குப்பதிலாகத்துப்பட்டாவால் தலையை மூடிக்கொள்ளஅனுமதிப்பதாகக்கல்லூரி நிர்வாகம்,சஞ்சிதாவிடம்கூறியுள்ளதாகதெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தனதுமுடிவைக்கல்லூரி நிர்வாகத்திடம் ஒரு வாரத்தில் தெரிவிப்பதாக சஞ்சிதாகாதர்கூறியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று (13-06-24) கல்லூரி நிர்வாகத்துக்கு சஞ்சிதா மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘உங்கள் உத்தரவைக் கவனமாக பரிசீலித்த பிறகு, உங்கள் நிறுவனத்தில் மீண்டும் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். புதிய வாய்ப்புகளை ஆராயவும் முடிவு செய்துள்ளேன். இந்த நேரத்தில் புதிய வாய்ப்புகளைத்தேடுவதற்கு இதுவே சிறந்த வழி என்று நான் நம்புகிறேன். மீண்டும் அதே கல்லூரியில் பணியாற்றுவதற்கு எனக்கு வசதியாக இருக்காது ’ என்றுதெரிவித்தார்.