Action order of the court for A pregnant 11-year-old girl

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவரை ஒரு போதை ஆசாமி, பாலியல் வன்கொடுமை செய்ததால், சிறுமிக்கு கரு உருவானது. இந்த நிலையில், சிறுமியின் 30 வார கருவை கலைக்க அனுமதி கோரி அவரது தந்தை மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

அந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அவரது மனுவை, நீதிபதிகள் ஷர்மிளா தேஷ்முக், ஜித்தேந்திர ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி, 18வயதுக்கு உட்பட்டதால், அவரது கருவை கலைக்க அனுமதி வழங்கப்படுகிறது என்றும், ஒருவேளை சிறுமியின் வயிற்றில் வளரும் குழந்தை பிறக்கும் பட்சத்தில், அதை மருத்துவமனை நிர்வாகம் காப்பாற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

Advertisment

மேலும், குழந்தையை பெற்றோர் வளர்க்க விரும்பவில்லை என்றால், அந்த குழந்தையை மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 20 வாரத்துக்கு மேற்பட்ட கருவை கலைக்க வேண்டுமெனில் நீதிமன்றத்தின் அனுமதி பெறவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.