
நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நேற்று திருமணம் நடந்தது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில், திருமணம் முடிந்ததும் இன்று (10/6/22) திருப்பதி வேங்கடாசலபதியைத் தரிசிக்க திருப்பதிக்கு தம்பதியர் சென்றிருந்தனர்.
கோவில் வளாகத்தில் யாரும் செருப்பணிந்து செல்லக்கூடாது என்பது திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கட்டளை. இது ஆண்டாண்டுகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவில் வளாகத்தில் செருப்பு கால்களுடன் சென்றார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் செருப்புகளை கழட்டி விட்டுவிட்டு வெறும் கால்களுடன் கோவிலுக்குள் சென்ற நிலையில், வெறும் கால்களுடன் செல்ல நயன்தாரா மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து செருப்பு கால்களுடன் அவர் நடந்து சென்றது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்தநிலையில், இது குறித்து தேவஸ்தான நிர்வாகத்துக்கு தெரியவர, நிர்வாக குழுவினர் இது குறித்து விவாதித்துள்ளனர். விவாதத்தின் முடிவில், நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர். என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அறங்காவலர் குழுத் தலைவருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)