2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக உருமாறிய கரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் சூழலில், அனைத்து மாநிலங்களும் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கரோனா சூழலை சாதகமாக்கி அத்தியாவசிய பொருட்களை பதுக்கினாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்றாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தி முறைகேடுகளை மாநில அரசுகள் தடுக்க வேண்டும். உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர், சில்லறை வணிகர் தவறு செய்வதை தடுக்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.