police

Advertisment

போலீஸ் அதிகாரிகள் இயல்புக்கு மீறி தொப்பை வைத்திருந்தால் கொடுக்கப்படும் காலக்கெடுவில் உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் மூலம் பானை வயிற்றை குறைக்கவில்லை என்றால் ஒழுக்க ரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனகர்நாடக மாநிலரிசர்வ் போலீஸ் தலைமை அதிகாரி ஜெனரல்.பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்.

Advertisment

கர்நாடக மாநிலரிசர்வ் போலீஸ் அதிகாரியானஜெனரல்.பாஸ்கர் ராவ் காவல் நிலையங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், பானை வயிறு கொண்ட போலீஸ் அதிகாரிகள் கண்டிப்பாக தங்களது தொப்பையை குறைக்கவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிளாண்ட்ஸ் கமாண்டர்கள்தொப்பை உள்ள போலீஸ் அதிகாரிகளைகண்டறிந்துஉடல் நிறை குறியீட்டு எண்ணான பி.எம்.ஐ கண்காணித்துஅதற்கு தகுந்தாற்போல கடுமையான உடல் பயிற்சிகளுடன் உடலை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு இயல்புக்கு மீறி தொப்பை இருந்தால் அணிவகுப்பு மற்றும் பயிற்சியை மீறி அடையாளம் காணப்படும் போலீசார்கள் விருப்ப விளையாட்டு மற்றும் ஜாகிங், நீச்சல் பயிற்சிகளுக்கு கட்டாயப்படுத்தப்படுவர் எனவும் ராவ்தெரிவித்துள்ளார்.