/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gurpreetn.jpg)
தன்னை தானே தவறுதலாக துப்பாக்கியால் சுட்டு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஒருவர் பலியாகியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியான மேற்கு தொகுதி எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வந்தவர் குர்பிரீத் கோகி. இவர், நேற்று தனது அறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், எம்.எல்.ஏ குர்பிரீத் கோகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குர்பிரீத் கோகி தனது அறையில் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது தவறுதலாக தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டதால் பலியாகியுள்ளார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த 58 வயதான குர்பிரீத் கோகி, பஞ்சாப் முன்னாள் அமைச்சராகவும், எம்.எல்.ஏவாகவும் பதவி வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)