Advertisment

வேகமாக திரும்பிய பேருந்து... கதவு வழியாக வெளியே விழுந்த வயதான பெண்!

கேரளாவில் ஓடும் பேருந்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள அட்டப்பாடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளது. அப்போது பேருந்தின் ஒருபக்க கதவு மட்டுமே மூடப்பட்டு இருந்தது. மற்றொரு கதவு கோளாறு காரணமாக மூட முடியாமல் இருந்துள்ளது.

Advertisment

பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வேகமாக திரும்பியதால் நிலைகுலைந்த உள்ளே நின்ற அந்த பெண், கதவின் வழியாக வெளியே விழுந்துள்ளார். அப்போது பின்னால் மற்றொரு பேருந்து வந்துள்ளது. ஆனால், அந்த பேருந்து ஓட்டுநர் இந்த பெண் கீழே விழுந்துள்ளதை பார்த்ததும் பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கீழே விழுந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe