வாகனம் ஓட்டும் போது இளைஞருக்கு வலிப்பு ஏற்பட்டதால் நடந்த சாலை விபத்தில் மூன்று கார்கள் சேதமடைந்தன. பஞ்சாப் மாநிலம் மொகாலியை சேர்ந்தவர் ராஜிந்தர் சிங். இவர் அப்பகுதியில் மெக்கானிக்காக உள்ளார். சம்பவத்து அன்று ஒரு வாகனத்தை பழுது நீக்கி அதனை சரிபார்ப்பதற்காக ஓட்டிச்சென்றுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
வாகனத்தை சாலையில் இயக்கிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. இதனால் நிலைகுலைந்து போன அவர் வாகனத்தை தொடர்ந்து இயக்க முடியாமல் வாகனத்திற்குள்ளாகவே சரிந்தார். பரபரப்பான சாலையில் இந்த சம்பவம் நடந்ததால் எதிர்புறம் வந்த வாகனத்தில் மோதி அவர் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் மூன்று கார்கள் சேதமடைந்தன. அவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.