திருமணம் ஊர்வலங்களை வித்தியாசமாக நடத்துவது தற்போது பல இடங்களில் செய்யப்படுகிறது. அதே மாதிரி கேரளாவில் நடைபெற்ற திருமணம ஊர்வலம் ஒன்று, அசம்பாவிதத்தில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஊர்வலம் சென்ற குறுகிய சாலையில், மணமகனின் நண்பர்கள் இரு சக்கர வாகனத்தை வைத்து சாகசம் செய்துள்ளார்கள். இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை தூக்கியவாறு அவர்கள் வாகனத்தை இயக்கியுள்ளனர்.
அப்போது நிலைதடுமாறிய வாகனம் ஒன்று முன்னாள் சென்ற நபர்கள் மீது மோதியது. வாகனம் மோதியதில் 9 பேர் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தனர். இதில் அனைவரும் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து சாகசத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow Us