
பைக் வாங்கிய முதல் நாளிலேயே இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பாலப்பள்ளம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் ஷாஜகான். 19 வயது இளைஞரான இவர் நீண்ட காலமாக புதிய பைக் வாங்க வேண்டும் என்று கனவோடு இருந்த நிலையில் பெற்றோர்களிடம் கேட்டு புதிய பைக் ஒன்றை கடந்த புதன்கிழமை வாங்கியுள்ளார். நண்பர்களிடம் தனது புதிய பைக்கை காட்டுவதற்காகச் சென்ற ஷாஜகான், தொடர்ந்து பாலக்காடு-குழுபள்ளி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரில் வந்த கார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஷஜகான் திருச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் கடைசியில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த சம்பவம் கேரள மாநிலம்பாலக்காட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us