அஸ்ஸாம் மாநிலத்தில் மின்கம்பத்தில் அரசு பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் பலிதாபமாக உயிரிழந்தனர். அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள துபரி பகுதியில் இருந்கு கவுகாத்திக்கு 40 பயணிகளிளுடன் அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை புறப்பட்டு சென்றது. பேருந்து கோல்பூரா மாவட்டத்தில் உள்ள டூபா பகுதிக்கு வந்த போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisment

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 30க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையில் வண்டியின் ஓட்டுநர் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.